ருதுராஜ் – கான்வே அதிரடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே

புதுடெல்லி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 77 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை டெல்லி அணி ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்தாலும் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் சிஎஸ்கே களமிறங்கியது.

ருதுராஜ் கெயிக்வாட், டெவன் கான்வே இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடி டெல்லி பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 141 ரன் சேர்த்து அமர்க்களமான தொடக்கத்தை கொடுத்தது. குல்தீப் வீசிய 12வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை தூக்கி மிரட்டிய ருதுராஜ் 79 ரன் (50 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி சகாரியா பந்துவீச்சில் ரூஸோ வசம் பிடிபட்டார். அடுத்து கான்வேயுடன் இணைந்த ஷிவம் துபேவும் அதிரடியாக சிக்சர்களைப் பறக்கவிட, சிஎஸ்கே ஸ்கோர் அசுர வேகத்தில் எகிறியது.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 21 பந்தில் 54 ரன் சேர்த்தனர். துபே 22 ரன் (9 பந்து, 3 சிக்சர்), கான்வே 87 ரன் (52 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஜடேஜா அதிரடி காட்ட… சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. தோனி 5 ரன், ஜடேஜா 20 ரன்னுடன் (7 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் கலீல், அன்ரிச், சகாரியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. பிரித்வி ஷா, கேப்டன் வார்னர் இருவரும் துரத்தலை தொடங்கினர்.