திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கயது
சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 3 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக இருக்க கூடிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் என மொத்தம் 28 பேர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுறுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஜூன் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள சூழலில், இன்றைய உயர்நிலை செயல் திட்ட குழு ஆலோசனை கூட்டத்திலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கபட உள்ளது.
குடியரசு தலைவர் ஜூன் 5-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை விழாவில் பங்கேற்கவுள்ளார். எனவே அந்த விழாவிற்கு திமுக சார்பில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.