அண்ணா கேன்டீனுக்கு இலவச நிலம் வழங்கிய சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு ‘அண்ணா கேன்டீன்’ திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், ஆட்சி மாறியதால், திறக்கப்பட்ட அனைத்து அண்ணா கேன்டீன்களும் மூடப்பட்டன.
இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியினர் சொந்த செலவில் சில முக்கிய நகரங்களில் திறந்த அண்ணா கேன்டீன்களை ஜெகன் அரசு மூடியது.
இதனிடையே, குப்பம் பஸ் நிலையம் அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் அண்ணா கேன்டீனை திறந்தனர். இங்கும் பிரச்சினை தலை தூக்கியதால், அண்ணா கேன்டீனுக்காக சந்திரபாபு நாயுடு 20 சென்ட் நிலத்தை வழங்கி உள்ளார்.