சென்னையில் இளம்பெண் தற்கொலை
சென்னை: சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 56). இவருடைய மகள் கவிதா (25). பி.காம். பட்டதாரியான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் கவிதா வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவிதாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது.
பின்னர் கவிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் கவிதாவின் தற்கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.