வேளாண் சட்டங்களை முறியடிக்கும் காங்கிரசின் மசோதா தயார்

வேளாண் சட்டங்களை முறியடிக்கும் காங்கிரசின் மசோதா தயார்
வேளாண் சட்டங்களை முறியடிக்கும் காங்கிரசின் மசோதா தயார்

வேளாண் சட்டங்களை முறியடிக்கும் காங்கிரசின் மசோதா தயார்

புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புதிய மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸ் தயாரித்துள்ளது. இதற்கு ‘விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் விளைபொருட்கள் (சிறப்பு பிரிவுகள்) மசோதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும், வக்கீலுமான அபிஷேக் சிங்வி, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டசபைகளுக்கு அரசியல் சட்டத்தின் 245(2)-வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக பா.ஜனதா ஆண்ட மாநிலங்கள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களும் செல்லாது என்று இதில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான விலையை தரக்கூடாது என்று ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு, அம்மாநில சட்டசபைகளில் அது நிறைவேற்றப்படும். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த மசோதாவை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.