இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,778 பேருக்கு தொற்று உறுதி; 62 பேர் உயிரிழப்பு..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,778 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,12,749-ஆக உயர்ந்தது.

* புதிதாக 62 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,16,605-ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,542 -பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,73,057-ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23,087 - பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில் 1,81,89,15,234 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 30,53,897 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.