கலைஞர் தொலைக்காட்சியில் அஞ்சனா தொகுத்து வழங்கும் "குக்கிங் கில்லாடிஸ்"

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையலும், சுவாரஸ்யமும் நிறைந்த நிகழ்ச்சி "குக்கிங் கில்லாடிஸ்". இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை11:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கலகலப்பான இந்த நிகழ்ச்சியை முன்னதாக பிரபல சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ், பவ்யாஸ்ரீ தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா ரங்கன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் விருந்தினராக பங்கேற்று அசத்திய அஞ்சனா, தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் இந்த நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமடைந்துள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வரும் பிரபலம், கொடுக்கப்பட்ட டாஸ்க் மூலம் சமையலை எப்படி கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் செய்து முடிக்கிறார்கள் என்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். சமையலின் நடுவே வரும் குருஜிக்குக்கும்இளம் ஃசெஃப்பான யஷ்வந்த்தின் தனித்துவமான சமையலுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஞாயிறுதோறும் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், வரும் வாரங்களில் டி.எஸ்.கே, அஸார்,சரண்யா, கற்றது சமையல் குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருக்கிறார்கள்.