"மார்னிங் பிரைம் டைம்" (Morning prime time)
"மார்னிங் பிரைம் டைம்" (Morning prime time)
சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தி தொகுப்பு"மார்னிங் பிரைம் டைம்" .
"மார்னிங் பிரைம் டைம்" செய்தியில், முக்கிய செய்திகளை வழங்குவது மட்டுமல்லாமல், அன்றைய நாளின் முக்கிய அரசியல் நிகழ்வுகள், அது குறித்தான விரிவான செய்தி தொகுப்புகள், மற்றும் செய்தியாளர்களின் நேரலை தகவல் என ஒவ்வொரு செய்திகளையும் விரிவாக வழங்குகிறது. மேலும் மக்களின் பிரச்சனைகள், நீண்டகால கோரிக்கைகள் அனைத்தையும் கதை வடிவில், விரிவான தகவலுடன் வழங்குவது மட்டுமல்லாமல், அதற்கு தீர்வு காணவும் வழிவகை செய்கிறது. ஒவ்வோரு நாளும், அன்றைய நாளின் பரபரப்பான நிகழ்வுகளை அது சார்ந்த நிபுணர்களின் நேரலை தகவல்களோடு, அந்த நிகழ்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் தெளிவாக வழங்குகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த செய்தி தொகுப்பை மது தொகுத்து வழங்குகிறார்.