திமுக பேரணி: சென்னையில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை நடத்தும் பேரணியின் காரணமாக 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 2 ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தகவல் அளித்துள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.