ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!!
சேப்பாக்கத்தில் ஏப்ரல் 3ம் தேதி நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ இடையிலான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் வாங்க நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.