மகனை கொன்ற தந்தை - வீடியோ பதிவு செய்த மகள்
பெங்களூரு: பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (48), இவருடைய மனைவி கீதாபாய் (45). இந்த தம்பதிக்கு 17 வயது நிரம்பிய மகளும், 12 வயது நிரம்பிய
வருண் என்ற மகனும் இருந்தனர்.
நேற்று முன்தினம் வீட்டில் கீதாபாய், வருண் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்., "கந்துவட்டி கொடுமையால் மனைவி தனது மகன் வருண்" தற்கொலை செய்துகொண்டதாக சுரேஷ் போலீசாரின் விசாரணையில் கூறினார்.
இந்நிலையில், நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், ‘வருணை துடிதுடிக்க சுரேஷ் தூக்கில் தொங்க விட்டார். ‘வருண் கதறியும், சுரேஷ் மனம் இறங்காமல் அவரை கொன்றார். வருண் துடிப்பதை பார்த்த கீதாபாய் கதறியபடி வீட்டில் அங்கும், இங்குமாக ஓடினார்’. பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சுரேசை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சுரேசும், கீதாபாயும் நடத்திய சிட்பண்ட்டில் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் வருணை தூக்கிலிட்டு சுரேஷ் கொன்றார். இதையடுத்து கீதாபாய் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சுரேஷ் தற்கொலை செய்ய முயன்றபோது அதை மகள் தடுத்ததால் 2 பேரும் தற்கொலை முடிவை கைவிட்டனர். மகனை சுரேஷ் கொன்றபோது அதை அவருடைய மகள் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோதான் தற்போது வெளியாகி உள்ளது’ என்றனர்.