பெண் போலீஸ் ஏட்டுவின் மகள்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பெண் போலீஸ் ஏட்டுவின் மகள்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பெண் போலீஸ் ஏட்டுவின் மகள்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி (வயது 46). இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து அதே குடியிருப்பில் மகள் அக்சராவுடன் (15) வசித்து வருகிறார். அக்சரா, முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் கலைவாணி பணி முடிந்து, அம்பத்தூரில் உள்ள அவரது அண்ணன் குணசேகரன் வீட்டுக்கு சென்றுவிட்டு, இரவு தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் தட்டியும் அக்சரா கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தனது மகள் அக்சரா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அக்சரா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.