இந்தியா கொரோனா பாதிக்கப்பட்டோர் 60 லட்சத்தை தாண்டியது
இந்தியா கொரோனா பாதிக்கப்பட்டோர் 60 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,74,703 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,039 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,542 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 74,893 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் இதுவரை 50,16,521 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் 9,62,640 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று 7,09,394 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 7,19,67,320 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.