மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ . நீதிபதி குடியிருப்பின் முன்பு செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்க முயற்சி

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ . நீதிபதி  குடியிருப்பின் முன்பு செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்க முயற்சி
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ . நீதிபதி குடியிருப்பின் முன்பு செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்க முயற்சி

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ . நீதிபதி குடியிருப்பின் முன்பு செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்க முயற்சி : செய்தியாளரின் கைபேசி மற்றும் காமிராவை சேதப்படுத்திய சமுகவிரோதிகள் .சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் : சமுகவிரோத கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தல்.

 

கடந்து 2019 ஆம் ஆண்டு அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக, காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.

 

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தொழிலதிபரை கடத்தி நில மோசடி செய்தது தெரியவந்ததால் திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவகுமார், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த மோசடி வழக்கில் 

இன்று (13-07-2021)

கோடம்பாக்கம் ஸ்ரீயை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து வந்தனர்.

 

அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சி செய்தியாளர் அன்பரசனின் மொபைல் போனை பறித்த ஶ்ரீயின் அடியாட்கள் ,அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டுள்ளனர். தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடு ஒளிப்பதிவாளர் வைத்திருந்த கேமராவை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியுள்ளனர். 

 

வேறு வழக்குகளுகாக அங்கு வந்திருந்த காவல்துறையினரிடம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் தங்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என கேட்டபோது, *சாரி சார் இது எங்க லிமிட் இல்லை என்று அவர்கள் பின்வாங்கியுள்ளனர்*.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர் எழும்பூர் காவல்துறையினர்.

 

*செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுத்து காமிராவையும் , கைபேசியை சேதப்படுத்திய சமுகவிரோதிகளின் வெறியாட்டத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்ற்து. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தும் எல்லைக் காரணம் காட்டி ஒதுங்கி நின்ற காவல்துறையினரின் பொறுப்பற்ற போக்கினையும் கண்டிக்கின்றோம். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற சமூக விரோத கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.*

 

பாரதிதமிழன்

இணைச் செயலாளர் 

சென்னை பத்திரிகையாளர் மன்றம்

13-07-2021