மாநில அளவிலான எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்தது வேலம்மாள் பள்ளி.
மாநில அளவிலான எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்தது வேலம்மாள் பள்ளி.
2021 டிசம்பர்- 12 முதல் 14 வரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சையது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 19-வது, மாநில சீனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடிய முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் கனவு அணியாக அறியப்படும் பெண்கள் எறிபந்து அணி பல்வேறு சவால்கள் நிறைந்த பொதுப் பிரிவில் விளையாடி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் வேலம்மாள் பள்ளியின் 12 பள்ளி மாணவிகள் கொண்ட குழு 15-6, 15-8 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை மாவட்டத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. ராமநாதபுரம் எறிபந்து விளையாட்டுக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான இப்போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன.
வேலம்மாள் பள்ளி நிர்வாகம் வெற்றி பெற்ற அணியின் சிறப்பான சாதனையைப் பாராட்டி ஊக்குவித்தது.