கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுகிறது

கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுகிறது

சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுவதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் அறித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை (22-ஆம் தேதி) ஒரு நாள் மட்டும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

முன்னதாக நேற்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அதில் தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகள் அனைத்தும் வரும் மாா்ச் 31 வரை மூடப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுவதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் இன்று அறித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.