இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி

இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி
இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி

இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி


புதுடெல்லி:

அபார வளர்ச்சி பெற்று லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 4 ஆண்டுகளாக சரிவை சந்தித்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

வங்கி தனது செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்தது. மருத்துவ சிகிச்சை, கல்வி போன்ற எதிர்பாராத செலவினங்களுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்கமுடியும். டிசம்பர் 16 வரை இந்த கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவசரம் அவசரமாக ஏடிஎம் மையங்களுக்குச் சென்று பணத்தை எடுக்கத் தொடங்கினர். ஆனால், தற்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மக்களுக்கு பணத் தேவை அதிகரித்துள்ள இந்த சமயத்தில், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று நிர்ணயித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வாடிக்கையாளர்கள் பலர் கூறுகின்றனர்.

அதேசமயம் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ஆர்பிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான திட்டத்தை நேற்று அறிவித்தது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு காலம் முடிவதற்குள் இந்த இணைப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.