மராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி

மராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி
மராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி


மும்பை:

மராட்டிய கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

மராட்டிய மாநிலம்  மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் தமன்கர் நாக்கா அருகே நார்போலி பட்டேல் காம்பவுண்ட்டில் உள்ள ‘ஜிலானி’ என்ற 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒருபகுதி நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து அப்பகுதியில் மீட்புக்குழுவினர், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.