தென் சென்னை  மேற்கு மாவட்டத்தை சார்ந்த எந்த நிர்வாகியும் அந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்

தென் சென்னை  மேற்கு மாவட்டத்தை சார்ந்த எந்த நிர்வாகியும் அந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்
தென் சென்னை  மேற்கு மாவட்டத்தை சார்ந்த எந்த நிர்வாகியும் அந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்

தென் சென்னை மேற்க்கு மாவட்டம் 

 அனைத்து தென் சென்னை மேற்கு மாவட்ட  நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் மற்றும் வட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு 


 மக்கள் தலைவர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலுக்கு தற்பொழுது வரவில்லை என்ற அறிக்கையை கடந்தவாரம் வெளியிட்டிருந்தார்.

அவரது அறிக்கையை திரும்ப பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறவழிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 அந்த அறவழிப் போராட்டத்திற்கு நமது தலைமை மன்றம் அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 தென் சென்னை  மேற்கு மாவட்டத்தை சார்ந்த எந்த நிர்வாகியும் அந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த முறை நடந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் தலைவர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் அவரது உடல் நிலை குறித்து விரிவாக அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் விவரித்தார், அதனை ஏற்றுக்கொண்டு நமது தலைவர் அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மேலும் கட்டுப்பட்டு உடன் நிற்பதாக அனைத்துமாவட்ட செயலாளர்களும் ஒருமனதாக உறுதியளித்தனர். எனவே நாம் அனைவரும்,

 தலைவரின் முடிவுக்கு கட்டு பட்டு அவர்களிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 
.
இப்படிக்கு
என்றும் உங்களுடன்
அன்புள்ள
R ரவிச்சந்திரன்
மாவட்டச் செயலாளர்
தென் சென்னை மேற்கு மாவட்டம்