வாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன்

வாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன்
வாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன்
வாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன்

வாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன்

 

லக்னோ : உத்தர பிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், ஒபாமா, மோடி, பின்லேடன் போன்ற பெயர்கள் இடம் பெற்று இருப்பது, அதிகாரிகளை மிரளச் செய்துள்ளது.

உ.பி., மாநிலத்தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில், பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த பட்டியலில், பராக் ஒபாமா, ஒசாமா பின்லேடன், நரேந்திர மோடி, அமிதாப் பச்சன் போன்ற பெயர்கள் இடம் பெற்றுள்ளன. உ.பி.,யில் உள்ள சிறிய கிராமங்களைச் சேர்த்தவர்கள், சர்வதேச பிரபலங்களின் பெயருடன் இருப்பதை கண்டு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மிரண்டனர்.
இந்த பட்டியலில், கத்ரீனா, சோனம், ஹேமமாலினி, ஹேலன் போன்ற, 'பாலிவுட்' நட்சத்திரங்கள் மற்றும் தோனி, டெண்டுல்கள், கோஹ்லி போன்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.'ஒபாமா, பின்லேடன் போன்று, நம் நாட்டுக்கு சம்பந்தமில்லாத சந்தேகத்துக்குரிய பெயர்களை கொண்டவர்களை மட்டும், உண்மை தன்மையை சரிபார்த்த பின், பட்டியலில் இணைக்கிறோம்' என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.