“நட்சத்திர ஜன்னல்”
திரைப்படம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியமோ அதேபோல் தான் திரை நட்சத்திரங்களின் பட அனுபவங்கள் மற்றும் அவர்களை பற்றிய ஆச்சர்யமான விஷயங்களை பற்றி கேட்டறிவதும் சுவாரசியம் தான்.. அதிலும் அவற்றை சம்பந்தப்பட்ட திரை நட்சத்திரங்களே பகிர்ந்து கொள்வது கூடுதல் சுவாரசியம்.
அப்படி ஒரு சுவாரசிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தான் புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வரும் ‘நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன் சிம்பு, ஆர்யா, ஆரி, நகுல், விஜய்சேதுபதி இயக்குனர்கள் ஹரி, பொன்ராம், சித்தார்த் விபின் என மக்கள் மனம் கவர்ந்த எண்ணற்ற திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெரும் இதில் இந்த வாரம் பிரபல நடிகை நந்திதா தங்கள் திரை அனுபவங்களை கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.
வாரம் ஒரு நட்சத்திரம் என ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெரும் நட்சத்திரங்கள் திரையுலகில் தனது தொடர் வெற்றியின் ரகசியம் தனது அவதாரம் என பல விஷயங்களை சுவைபட பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
பிரபல தொகுப்பாளனியான VJ அஞ்சனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.