“கேள்வி நேரம்” (நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு) நியூஸ் 7
“கேள்வி நேரம்”
(நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு)
தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் கள நிலவரங்களையும் ,மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளையும் மிகவும் துல்லியமாக கணித்து அன்றைய நாளின் முடிவில் அதை மக்கள் தளத்தில் நின்று விவாதிக்கிறது நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம். தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளியில் (TRP )முதல் இடத்தை தொட்ட நிகழ்ச்சி "கேள்வி நேரம்"
மிக துடிப்பான கேள்விகள்,ஆழமான விவாதங்கள்,தர்க்கமான கருத்துக்கள் மற்றும் பல அரசியல் முன்னெடுப்புகளும் இந்த நிகழ்ச்சியில் அலசப்படுகின்றன. தலைப்பு செய்திகளை மைய்யமாக வைத்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் வெளிப்படும் கருத்துகளும் தமிழகத்தின் தலைப்பு செய்திகளாகியிருக்கின்றன. ட்விட்டர் வழியாக நேயர்களின் கருத்துகளையும் அறிந்து மக்களின் குரலையும் இந்நிகழ்ச்சி அதிகாரித்தில் இருப்பவர்களிடம் முன் வைக்கிறது. தேர்வு செய்யப்படும் தலைப்பின் பல்வேறு பரிமாணங்களை தயாரிப்பு குழு ஆராய்ந்து அதன் முழு விவரத்தை ஒரு மணிநேரத்திற்குள் வழங்குகிறது. எடுத்துக்கொள்ளும் தலைப்பை பொறுத்து சிறப்பு விருந்தினர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள்.
நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு நியூஸ் 7 தமிழில் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சி அரசியல் தளத்திலும் சமூக தளத்திலும் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இந்த நிகழ்ச்சியை புதிய பரிதி தயாரிக்க அறம்பிறழாமல் வழி நடத்தி செம்மல் ,விஜயன், சுகிதா ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.