சந்தியா - கலர்ஸ் தமிழ் சேனலில் புதிய பேண்டசி தொடர்

கலர்ஸ் தமிழ் சேனல் தனது பிற மொழி சேனலில் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் சந்தியா என்ற தொடர் வருகிறது. இது ஒரு ஃபேன்டஸி த்ரில்லர் தொடர். ஆகஸ்ட் 21 முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சந்தியா என்ற பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. சிவராத்திரி அன்று சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் சந்தியா வழிபாடு நடத்துகிறார். சிவனின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் தெரியும் என்பது ஐதீகம். சந்தியாவுக்கு அந்த சிவனின் அருள் கிடைக்கிறது. அதில் அவள் வருங்கால கணவனை காண்கிறாள். இதனால் அவள் அதிர்ச்சி அடைகிறாள். காரணம் அவள் தற்போது வேறொருவனை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். இதற்கு காரணம் ஒரு தீய சக்தி. அது ஏன் சந்தியாவின் வாழ்க்கைக்குள் வரவேண்டும். வந்து என்ன செய்கிறது என்பதுதான் சந்தியாவின் கதை.