பாரத் பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு
பாரத் பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு: பல இடங்களில் வெறிச்சோடிய சந்தைகள்
சென்னை: பாரத் பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுநை, மதுராந்தகம், கும்பகோணம், சீர்காழி, புதுக்கோட்டையில் கடைகள் மூடப்பட்டுள்ளது. கோவை, மன்னார்குடி, மதுரை, கோபிச்செட்டிபாளையம், மரக்காணம், காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பாரத் பந்துக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டு்ள்ளன. சிவகங்கையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய சிறுவர், சிறுமிகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. புதுவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ இயங்கவில்லை. மேலும் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் புதுவையில் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடி, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. கோவையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சந்தைகள் மூடப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 10,000 கடைகள் மூடப்பட்டது. அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் தமிழக-கர்நாடக எல்லையில் பண்ணாரி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் கடைகள் அடைப்பட்டு பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்படுகிறது.