ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள்

ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள்
ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள்
ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள்

ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் அவர்களது கற்பித்தல் செயல்முறையில் சுமார் 400%  சராசரி வளர்ச்சி அடைந்துள்ளதை ஒப்புக்கொள்கின்றனர்: டீச்மின்ட்

•    டீச்மின்ட் ஆப் -ல் பதிவுசெய்த 8 வாரங்களுக்குள் மாணவர் சேர்க்கை மிகவும் அதிகரித்துள்ளதாக அதை பயன்படுத்தும் ஆசிரியர்கள் முன்மொழிந்துள்ளனர் என்று அதன் தரவு நமக்கு தெரிவிக்கிறது. 


•    ஆசிரியர்களின் இந்த கூற்று மற்றும் ஆன்லைன் கற்றலின் அபார வளர்ச்சிக்கு 5 மிக முக்கிய காரணிகளாக பின்வருபவற்றை கூறலாம்:  எந்தவொரு வணிகத்தையும் இப்போது ஆதி முதல் அந்தம் வரை டிஜிட்டல் மயமாக்கலாம், வழங்கப்படும் சேவைகள் இந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கு என்றில்லாமல் எல்லையைக்கடந்து மூலை முடுக்குகளில் கூட  சேவை வழங்கக்கூடிய திறன், தனக்கென்ற தனித்துவம் வாய்ந்த கற்பித்தல் முறைகளை உருவாக்கும் திறன், கூடுதல் நேரம் மற்றும் பிற கற்றல் அம்சங்களுக்கான அணுகல், இணைக்கப்பட்ட சமூக நெட்ஒர்க்குகளில் நேர்மறையான எண்ணங்களை மாணவர்களிடத்தில் ஊக்குவிக்கும் திறன் என பலவற்றை கூறிக்கொண்டே போகலாம்.

புதுடெல்லி, டிசம்பர் 24, 2020: இந்தியாவின் முன்னணி எட்டெக் நிறுவனமான டீச்மின்ட், கற்றல் பயிற்சிக்கு டிஜிட்டல் தீர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது, வழக்கமான பழைய முறை கற்றல் வகுப்பறை அமைப்பிலிருந்து ஆன்லைன் பயிற்சிக்கு மாறிய ஆசிரியர்கள் டீச்மின்ட் ஆப் -ல் பதிவுசெய்த 8 வாரங்களில் தங்களது கற்றல் தொழிலிலானது சராசரியாக 4x வளர்ச்சியைக் கண்டுள்ளனர் என்பதை தற்போது அந்த தளத்தில் செயல்பாட்டில் இருக்கும் ஆசிரியர்கள் குறிப்பிடும் புள்ளிவிவரத்தை வெளிப்படையாக இது குறிப்பிடுகிறது. 
டீச்மின்ட் அதன் கல்வி தளத்தில்  2.5 லட்சம் ஆசிரியர்கள் அவர்களை பதிவு செய்திருப்பதுடன் , ஒவ்வொரு மாதமும் 50,000 ஆசிரியர்களின் புதிய சேர்க்கையால் அதிகரித்தும் வருகிறது. . இந்த வளர்ச்சிக் காலகட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக தொற்றுநோய் பரவலின் போது போடப்பட்ட  ஊரடங்கு காரணமாக அவர்களது வகுப்பறை கற்பித்தல் வீழ்ச்சியடையத் தொடர்ந்ததையடுத்து, இந்த ஆன்லைன் தளத்தில் அவர்கள் பதிவு செய்த சில தினங்களிலேயே,  தனிப்பட்ட முறையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் வளர்ச்சிக் கதைகள் 200% வளர்ச்சியிலிருந்து 1000% வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதை கூறுகின்றனர், அதிலும் குறிப்பாக சில ஆசிரியர்கள் இப்போது வரையிலும் சுமார் 1600 மாணவர்களின் எண்ணிக்கையை தங்கள் வகுப்பறைகளில் சேர்த்துள்ளனர், டிஜிட்டல் தளங்களுக்கு மாறுவதன் மூலம் கல்வியாளர்கள் பெறக்கூடிய மதிப்பை இது தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 
கற்றலில் புது புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ஆன்லைன் வகுப்பறை கற்றல் வளர்ச்சியை மேம்படுத்தும் காரணிகளில்  முதலாவதாக, ஆசிரியர்கள் இப்போது அவர்களின் பாடம் கற்பித்தல், வகுப்பின் மீதான மாணவர்களின் ஈடுபாடு மற்றும் மற்ற நிர்வாக மேலாண்மை உள்ளிட்ட முழு கற்பித்தல் பணி முழுவதையும் எளிதாக டிஜிட்டல் மயமாக்க முடிகிறதென்று  புள்ளிவிவரம் கூறுகிறது.
டிஜிட்டல் முறையில் கல்வி வழங்கப்படுவதால், ஆசிரியர்கள் இப்போது தங்கள் வகுப்பறையை உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்ல முடிகிறது, மேலும் அவர்களின் சொந்த புவியியல் இருப்பிடம் கற்றலில் அவர்களுக்கு இனி தடைக்கல்லாக இருக்கப்போவதில்லை. எப்பொழுதுமில்லாத இந்த முன்னேற்ற வளர்ச்சிக்கான மற்றொரு காரணமாக, டிஜிட்டல் வகுப்பறைகள் நேரத்தை சரியாக பயன்படுத்துவது மற்றும் பிற திறன்வளர்ச்சியில் பெரும் பங்காற்றுவதும் ஒரு மூலக்காரணம். இது வகுப்பறை கற்றலை விட கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை அனுமதிக்கிறது.
இத்தகைய முன்னேற்ற வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படுவதும் மற்றும் முக்கியமான துணை தயாரிப்பாக  பார்க்கப்படுவதும் என்னவென்றால், சக்திவாய்ந்த ஆன்லைன் கருவிகள் வாயிலாக ஆசிரியர்களும், அவர்களது மாணவர்களும் கற்பனையாற்றல் மற்றும் பாடத்திற்கு ஒத்த அதே மாதிரி வடிவமைக்கப்பட்ட கற்பித்தல் முறைகளை உருவாக்க முடியும் என்பதே. இதன் மூலம், மேலும் ஆழமான கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கிட  முடியும். மேற்கூறிய அனைத்து காரணிகளும் புதிய தலைமுறை தொழில்நுட்ப ஆர்வலர்களான ஆசிரியர்கள் தங்கள் சொந்த சமூக நெட்வொர்க்குகளிலிருந்தே நேர்மறையான கற்றலை ஏற்படுத்துவதில் எந்தவொரு தொய்வுமின்றி, எண்ணிலடங்கா மாணவர்களை தங்கள் வகுப்பறைகளில் சேர்க்க உதவுகிறது.
டீச்மின்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மிஹிர் குப்தா அவர்கள்  கூறுகையில், “ஆசிரியரும் மாணவர்களும் ஒரே இடத்திலிருந்து நேருக்கு நேர் கல்விக்கற்கும் முறையே  இந்தியக்கல்வி முறையின்  அடிப்படையாக உள்ளது, இதுவே டிஜிட்டல்மயமாக்கலுக்கு முக்கிய தேவையாக வித்திட்டது, இந்த முறை சுயமாக கல்விக்கற்கும் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆனாலும்  இந்த பழைய வகுப்பறை கற்றல் முறை அதிக செலவுள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்றல் பணியில் குறிப்பிட்ட வளர்ச்சியையும்  அந்த அளவு இது ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். ஆனால் டிஜிட்டல் மயமாக்கல் கல்வியில் ஆசிரியர்கள் எந்தவொரு செலவும் இல்லாமல், அவர்களுக்கான வாய்ப்புகளை உலகம் முழுவதும் தடையில்லாமல் கொண்டு செல்ல முடிகிறது. இன்று டீச்மின்ட்டில் இருக்கும் ஆசிரியர்கள் அவர்கள் அருகில் வசிக்கும் நகரங்களில் உள்ள மாணவர்களுக்கும் கூட மிகச்சிறப்பான கல்வி  சூழலில் பாடம் கற்பிக்கிறார்கள். “
 “இப்போது பாடத்துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை எந்தவித புவியியல் கட்டுப்பாடுமின்றி அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பலரும் குறிப்பிட்ட துறையைப்பற்றி  மட்டும் குறைந்த விலையில் கல்வி கற்க முடியும் என்றும் அவர் கூறினார்.”
டிஜிட்டல் முறையில் கற்பித்தல் மூலம் எந்த அளவிற்கு லாபம் உள்ளது என்பதை அஜய் குப்தாவை எடுத்துக்காட்டாக வைத்து எளிதாக விளங்கிக்கொள்ளமுடியம், அவர் ஒரு டெல்லியை சேர்ந்த ஆசிரியர் மற்றும் CA தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்பவர். குப்தாவால் தன்னுடைய மாணவர்களின் எண்ணிக்கையை  மூன்றிலிருந்து 50 ஆக வெறும் ஒரே மாதத்தில் டீச்மின்ட் உதவியுடன் பெற்றார். மேலும் குப்தா கூறுகையில், டீச்மின்ட் உடன் இருப்பதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதே சமயத்தில் அவருடைய கனவை நிறைவேற்றுவதற்கு இதைவிட சிறந்த தளம் வேறு எதுவும் இருக்கமுடியாது என்றும்  கூறியுள்ளார். டீச்மின்ட் பயன்படுத்த மிக எளிதாகவும், கற்றல் ஆர்வத்தை தூண்டும்படியும் அமைந்துள்ளது. நான் முதலில்  டிஜிட்டல் கற்பித்தலை ஆரம்பித்த பிறகு எனது மாணவர்கள் இந்த முறையை மிகவும் பிரபலப் படுத்தினார்கள். இப்பொழு த எனக்கு ஜம்மு முதல் சென்னை வரை மாணவர்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவரையும் என்னால் முதல் மாதத்திலேயே சேர்க்க முடிந்ததே அதிசயமான ஒன்று தான். கற்றல் சாராத  பிற செயல்பாட்டு பிரச்சினைகளான அட்டெண்டன்ஸ், டெஸ்ட் ஆகிவைகளை இந்த ஆப் மூலம் எளிதில் நிர்வகி த்துக்கொள்ளலாம், இது ஆசிரியர்களை மேலும் அவர்களது பாடம் சம்பந்தப்பட்ட செயல்களில் அதிக கவனத்தை செலுத்த ஏதுவாக அமைகிறது.

டீச்மிண்ட் ஆப் -ல் ஆங்கில வகுப்பை நடத்தி வரும் உதித் நாராயண் சாஹு கூறுகையில்,  டிஜிட்டல் மயமாக்கலின் மற்றொரு வெற்றிக்கதை அவருடையது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜஞ்ச்கீர்-சம்பா மாவட்டத்தில் சுமார் 4 ஆண்டுகளாக ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு ஆசிரியர்தான், திரு. சாஹு.  கோவிட் -19 தொற்றுநோய்ப் பரவல் ஊரடங்கு காரணத்தினால் அவரது அனைத்து மாணவர்களையும் இழந்தார். இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றிடும்  பொருட்டு டீச்மின்ட் பயன்பாட்டைப் பற்றி டிசம்பர் தொடக்கத்தில் கேட்டறிந்தார். “இது எனது ஆன்லைன் கற்பித்தலில் முதல் அனுபவம், நான் எதிர்பார்த்ததை விட எளிதாக  இருப்பதைக் கண்டேன். ஆப் - ஐ பயன்படுத்திய இரண்டு வாரங்களிலேயே, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து எனது வகுப்பறைக்கு 37 புதிய மாணவர்களைச் சேர்க்க முடிந்தது. ஆரம்பத்தில் நான் நினைத்தேன், நிலைமை இயல்பு நிலை வரும் வரை மட்டுமே இவ்வாறு ஆன்லைனில் என் பாடங்களை கற்பிக்கவேண்டுமென்று, ஆனால் தற்போது ஆஃப்லைனில் முழுநேரத்தில் மீண்டும் கற்பிக்க நான் விரும்பவில்லை என்பதை நானே  இப்போது தான் உணர்ந்தேன். ” என்று கூறியுள்ளார்.
தற்போதைய இந்த தொற்றுநோய்ப் பரவல் சூழலில்,  உலகளாவிய பொது சுகாதார நெருக்கடியான ஊரடங்கு நடைமுறையுள்ள காலங்களில், ஆன்லைன் கற்றல் தீர்வை ஏற்றுக்கொள்வதை தவிர விரைவானதொரு தீர்வு வேறெதுவுமில்லை என்றே கூறலாம்.  மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட டீச்மின்ட் போன்ற பிராண்டுகளால் வழங்கப்படும் ஆன்லைன் கல்வியின் புதிய கல்வி முறைக்கு மாறியுள்ளனர். டீச்மின்ட் போன்ற ஆப் -ல் ஆசிரியர்கள் தங்கள் விருப்பம் போல பாடங்களை தெளிவாகவும், விளக்கமாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு உதவி செய்கிறது. டீச்மின்டின் சிறப்பே எளிமையான பயன்பாடடு இடைமுகமே என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்த டிஜிட்டல் தளம் நிஜவாழ்வில் இருக்கும் வகுப்பறை போலவே எல்லா வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. முக்கியமாக குறைந்த நெட்ஒர்க்கில் கூட,  தடை இல்லாமல்  சிறப்பாக இது செயல்படுகிறது  
டீச்மின்ட் பற்றி:
டீச்மின்ட், மே 2020 இல் தொடங்கப்பட்டது, இது டிஜிட்டல் யுக ஆசிரியர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மற்றும் கல்வி சார்ந்த அனைத்தையும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய ஒரு தொழில்நுட்ப தளமாகும். வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் வகுப்புகளை முன்னிறுத்தி, டீச்மின்ட் லைவ் வகுப்புகள், மாணவர்களை கல்வியில் ஈடுபடுத்தும் கருவிகள் மற்றும் பல வகுப்பறை பண்புகளை எளிதாக வழங்கிடும் பொருட்டு கட்டமைக்கப்பட்டுள்ள பல அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது. வழக்கமான பள்ளி கல்லுரி இயல்பு வகுப்புகளை ஒத்த டிஜிட்டல் வகுப்புகளை உருவாக்கிட உயர் தொழிநுட்பம் சார்ந்த டிஜிட்டல் வகுப்பறைகளை இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கும் கொண்டுசெல்வதே டீச்மின்ட்டின் ஒரே குறிக்கோளாக உள்ளது. அதன் படி டீச்மின்ட் இயங்குதளத்தை ஆராய்ந்து உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. டீச்மின்ட் மற்றும் அது வழங்கும் சேவைகள் அனைத்தும் பல அம்சங்கள் நிறைந்தும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஏற்ற பல்வேறு அளவீடுகளைக் கொண்டும், அனைத்து ஆசிரியர்களுக்கும் எளிமையாக அணுகக்கூடியதாகவும் இது உள்ளது.
தொற்றுப்பரவல் காரணமாக கீழ் சென்று கொண்டிருக்கும் இந்த கல்வித்துறை பற்றி ஒரு சமயம் பேசிக்கொண்டிருக்கையில் மனதில் தோன்றிய  ஒரு யோசனையே இந்த டீச்மின்ட். OYO, மெக்கின்ஸி, ஸ்விக்கி மற்றும் ரோபோசோ போன்ற பெருநிறுவனங்களின் திறன்வாய்ந்த நிர்வாக அனுபவம் பெற்ற மிஹிர் குப்தா, பயோஜ் ஜெயின், திவ்யான்ஷ் போர்டியா போன்ற ஐ.ஐ.டி பம்பாய்  மற்றும் ஐ.ஐ.டி டெல்லியின் பெருமை வாய்ந்த முன்னாள் மாணவர்களால் இந்த டீச்மின்ட்  நிறுவப்பட்டது.
இந்த நிறுவனக் குழுவின் ஒரே குறிக்கோளாக, ஆன்லைன் கற்பித்தலை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றுவதன் மூலம் ஆன்லைன் கல்வியை அனைவருக்கும் பொதுவாகவும், பெருவாரியானமாணவர்களுக்கும் கொண்டு செல்வதுமேயாகும். இந்த குறுகிய காலத்தில், டீச்மின்ட் ஏற்கனவே லைட்ஸ்பீட் இந்தியா, பெட்டர் கேபிடல் மற்றும் டைட்டன் கேபிடல் போன்ற பிரதான முதலீட்டாளர்களிடமிருந்து 2 நிதி சுற்றுகளில் $3.8மில்லியனுக்கும் அதிகமாக நிதியைப் (28.3 கோடி) பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குள், டீச்மின்ட் 1100+ நகரங்கள் மற்றும்  250,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டீச்மின்ட் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
எங்கள் குறிக்கோள் ‘ ஒரு நேரத்தில் ஒரே வகுப்பறை என்ற எதிர்காலத்தை உருவாக்குவது’
மீடியா தொடர்புக்கு: மிஹிர் குப்தா, media@teachmint.com | ரியான் ஆலன் மார்ஷல், ryan.marshall@firstpartners.in