“சத்தியம் சாத்தியமே”
“சத்தியம் சாத்தியமே”
சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது “சத்தியம் சாத்தியமே” என்ற விவாத நிகழ்ச்சி..
அன்றைய தினங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விரிவாகவும், துல்லியமாகவும் அலசப்படுகிறது.
மக்களை பாதிக்கும் பிரச்சனைகள், அரசு எடுக்கும் முடிவுகள், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள், நீதிமன்றங்கள் வழங்கும் அரிதான, சர்ச்சையான தீர்ப்புகள் என அனைத்து பிரிவுகளிலும், இந்த நிகழ்ச்சியில் விவாதங்கள் நடக்கிறது.
பல்வேறு துறைகளில் வல்லுநர்களாக உள்ளவர்கள், விவாத மேடை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். அவர்களிடம் சாட்டையடி கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளை பெற்று நெறியாளர் அரவிந்தாக்க்ஷன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்...
ஒரு தரப்பு சாராமல், நடுநிலையோடு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு, நேயர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சியில் இன்று என்ன தலைப்பில் விவாதம் நடக்கப்போகிறது என்று நேயர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..