ZEE5 தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் டிஜிட்டலில் ‘கேப்டன்’ திரைப்படம் வெளியீடப்படுவதை அறிவித்தது!
ZEE5 தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் டிஜிட்டலில் ‘கேப்டன்’ திரைப்படம் வெளியீடப்படுவதை அறிவித்தது!
~ சக்தி சௌந்தர் ராஜன் தலைமையில் ஆர்யா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, காவ்யா ஷெட்டி, சிம்ரன் மற்றும் ஹரிஷ் உத்தமணிஸ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று திரையிடப்பட உள்ளது. ~
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மயிர்க்கூச்செறியும்அடிதடி சண்டைக் காட்சிகள் நிறைந்த தமிழ் சயின்ஸ் ஃபிக்ஷன்‘ கேப்டன்’ திரைப்படத்தின் வெளியீட்டை அறிவித்தது. சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்கிய கேப்டன் திரைப்படத்தில் ஆர்யா மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் முக்கிய மையக் கதாபாத்திரங்களாகத் தோன்றும் இத்திரைப்படத்தில் காவ்யா ஷெட்டி, சிம்ரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்துள்ளனர். உருவகம் சார்ந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கண்கவர் படங்கள் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்களை பறைசாற்றும் இந்த ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி மூழ்கடிக்கத் தவறாது.
தி ஷோ பீப்பிள் தயாரிப்பில், உருவான இந்த கேப்டன் திரைப்படம், தடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் ஆபத்தான மற்றும் உயிருக்கு ஊறு விளைவிக்கக் கூடிய பணியை மேற்கொண்ட ஒரு துணிச்சல் மிக்க இராணுவ கேப்டன் தலைமையில் நடத்திச்செல்லப்படும் ஒரு இராணுவ வீரர்கள் குழுவின் கதையை விவரிக்கிறது, இந்த ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இதே தளத்தை பார்வையிடச்சென்ற முந்தைய குழுக்கள் விவரிக்க இயலாத மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய அந்தக் குழு முடிவு செய்கிறது.
டி இமான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தை எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். முதலில் தமிழில் வெளியாகும் இந்தத் திரைப்படம் 190+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலுள்ள பார்வையாளர் தெலுங்கு மொழியிலும் கண்டு மகிழலாம். எனவே, செப்டம்பர் 30ஆம் தேதி ஒளிபரப்பப்படவிருக்கும் இந்த ஈடு இணையற்ற அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்தின் முதல் காட்சியைக் கண்டு மகிழ இப்போதே தயாராகுங்கள்.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரியான திரு. மணீஷ் கல்ரா கூறுகையில், “விக்ரம், யானை, RRR மற்றும் முதல் மீ முதல்வல் மீ போன்ற திரைப் படங்களின் வெற்றிக்குப் பிறகு மற்றுமொரு தமிழ்த் தயாரிப்பான கேப்டன் திரைப்படத்தை - எங்கள் வெளியீட்டுத் தொகுப்பில் சேர்ப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நடிகர்களின் மிகச் சிறந்த நடிப்புத் திறனோடு கூடிய இத்திரைப்படத்தில் அற்புதமான கண்ணைக் கவரும் காட்சியமைப்புக்கள் நிறைந்துள்ளன. பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி ரசிக்கவைக்கும் வகையில் அதிரடி,சண்டை, அறிவியல் புனைவுக் கதை போன்ற கலையின் பல வகையான வடிவங்களை கேப்டன் திரைப்படம் கையாளுகிறது. நுகர்வோர்களின் பொழுதுபோக்குக்கான தளத்தை விரிவுபடுத்தி ஒரு பரந்த வகையிலான பல்வேறு கலை வடிவங்களை ஆராயும் வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதற்கே. ZEE5 இல் நாங்கள் முழு முயற்சியில் ஈடுபாட்டுள்ளோம்”
ZEE5 இல் விரைவில் ஒளிபரப்பப்படவிருக்கும் 'கேப்டன்” திரைப்படத்தைக் காணத் தயாராகுங்கள்!
ZEE5 பற்றி :
ZEE5 யானது இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் OTT தளம் மற்றும் பொழுதுபோக்கை விரும்பும் மில்லியன் கணக்கானவர்களுக்கு பலமொழிகளில் கதைகளை வழங்குபவர்களாவர்.. ZEE5 ஆனது உலகளாவிய பொருளடக்கங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக விளங்கும் ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிட்டட் (ZEEL) இல் இருந்து தோன்றிய நிறுவனமாகும்.எந்த ஒரு போட்டியுமின்றி நுகர்வோர் தேர்வில் முதலிடத்தில் விளங்குகிறது; இது 3,500 க்கும் அதிகமான திரைப்படங்களோடு ஒரு விரிவான மற்றும் பல்வேறு வகைப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட நூலகத்தை வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல்கள் மற்றும் 5+ லட்சத்திற்கும் அதிகமான மணிநேர ஆன்-டிமாண்ட் உள்ளடக்கம். (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) 12 மொழிகளில் வழங்கப்படுகிறது அவற்றில், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களின் சிறந்த ஒரிஜினல்கள், டிவி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், எட்டெக், சினிப்ளேக்கள், செய்திகள், நேரலை டிவி மற்றும் உடல்நலம் & வாழ்க்கை முறை ஆகியவையும் அடங்கும். உலகளாவிய தொழில்நுட்ப மறுசீரமைப்பாளர்களோடான அதன் கூட்டாண்மையிலிருந்து உருவாகும் ஒரு வலுவான ஆழமான தொழில்நுட்ப அடுக்கால் இயக்கப்படும் ZEE 5 ஒரு தடையற்ற மற்றும் மிகை-தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் கண்டு களிக்கும் அனுபவத்தை 12 மொழிகளில் பல சாதனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயக்க முறைமைகளில் வழங்குகிறது.
,.