காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.. 45 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீண்டும் போர்நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இது குறித்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, இஸ்ரேல் பாதுகாப்பு படை போர்நிறுத்தத்தை மீண்டும் அமல்படுத்தத் தொடங்கி உள்ளது. ஹமாஸ் படையினர் எந்த மீறலில், ஈடுபட்டால் நாங்கள் கடும் பதிலடி கொடுப்போம்” என குறிப்பிட்டுள்ளது.