கமலஹாசனுக்கு ஆதரவாக இயக்குனர் பேரரசு

கமலஹாசனுக்கு ஆதரவாக இயக்குனர் பேரரசு

கமலஹாசன் அவர்களின் குரல் கற்பனையின் குரல் அல்ல, 
காலத்தின் குரல்!
சங்க காலத்தின் குரல் !
 வரலாற்று உண்மை!
கன்னடம் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இவை எல்லாமே தமிழில் இருந்து பிரிந்தவைதான்.
இந்த உண்மை ஏன் ஒரு சில கன்னடர்களுக்கு சினம் கொள்ளச் செய்கிறது?
இவர்களின் மொழிப்பற்று வரலாற்று உண்மைகளை மாற்றி விட முடியுமா? 
உண்மையை உரைத்த கமல் ஏன் மன்னிப்பு கோர வேண்டும்?
அரசியல்வாதியாக அல்ல கமல் ஒரு தமிழனாய்த்தான் பேசியிருக்கிறார். 
ஆனால் கமல் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் என்னதான் திராவிடன்! திராவிடன்! திராவிடன் என்று சொன்னாலும், தெலுங்கர்களுக்கும் மலையாளிகளும், கன்னடர்களும் உங்களை தமிழனாகத்தான் பார்ப்பார்கள்!
பிரிந்து சென்ற பிள்ளைகளுக்கெல்லாம் மொழிப்பற்று இருக்கிறது. 
தமிழ் தாய் பிள்ளைகளுக்கு மட்டும் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது! 
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!

--இயக்குனர் #பேரரசு