சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுஇன்று வெளியிட்டுள்ளது.
காப்பான் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில், 2டி எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில்,நிகித் பொம்மி ஒளிப்பதிவில் உருவாகும் "சூரரைப் போற்று"படத்தில்சூர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாக இருந்த நிலையில், பட வெளியீட்டை அடுத்து ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளது படக்குழு.
இப்படத்தில், அபர்ணா பாலமுரளி,மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம்இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.




