நடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் ராணா. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார். அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார்.
இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படத்தை டுவிட்டரில் ராணா வெளியிட்டார். இந்த வருடம் இறுதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். ராணாவுக்கு நடிகர்-நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
                        
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        