நடிகை ராஷ்மிகா சினிமாவில் நிலைக்க அழகு முக்கியம்
            நடிகை ராஷ்மிகா சினிமாவில் நிலைக்க அழகு முக்கியம்
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காமரேட் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி
“சினிமாவில் நிலைக்க நடிப்பு, திறமை, அதிர்ஷ்டம் போன்றவற்றை விட அழகு முக்கியம். இதனாலேயே ஓராண்டுக்கு முன்பு வரை மாமிச உணவு சாபிட்டு வந்த நான் அதை நிறுத்தி விட்டேன். அழகாக இருக்க வேண்டும் என்றால் மாமிசத்தை விட்டு விட வேண்டும் என்று உணவியல் நிபுணர் கூறினார். அதனால் மாறி விட்டேன். காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பேன். அதோடு ஆப்பிள் சீடர் வினிகர் குடிக்கிறேன். ஒரு தட்டு நிறைய பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், கருப்பு திராட்சை, மாதுளம் பழங்கள் சாப்பிடுவேன். இதுதான் எனது காலை உணவு. இரவு தாமதமாக சாப்பிடுவது எனது கெட்ட பழக்கமாக இருந்தது. அதையும் மாற்றினேன். இதுதான் எனது அழகின் ரகசியம். எனது ரசிகர்களுக்கு சொல்வது என்னவென்றால் நேரத்தோடு சாப்பிடுங்கள். தூங்குவது சாப்பிடுவதற்கு நடுவில் ஒரு மணிநேரம் இடைவெளி இருப்பது மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவால் மட்டும் அழகு வராது நேர்மறையான எண்ணங்களுடன் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதில் மகிழ்ச்சி வந்தாலே அழகும் வந்து விடும்.” இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        