சிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னும் குதூகலமாக்க தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்!
சிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னும் குதூகலமாக்க தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்!
• வெள்ளிக்கிழமை, நவம்ர் 13 ஆம் தேதியிலிருந்து தீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்வுகளின் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது
• நவம்பர் 14, சனிக்கிழமையன்று சித்திரம் பேசுதடி 2, உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒளிபரப்பாகிறது
• “உயிரே” என்ற தொடருக்காக தீபாவளி சிறப்பு பாடலுக்கு இசையமைத்திருப்பதன் மூலம் தொலைக்காட்சியில் தனது இசைப்பயணத்தை தொடங்குகிறார் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
சென்னை, 10 நவம்பர் 2020: தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், இந்த தீபாவளிக்காக புதிய, புதுமையான, சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பை வழங்குவதன் மூலம் அதன் பார்வையாளர்களின் இல்லங்களை பரவசப்படுத்த தயாராக இருக்கிறது.   பிரபலங்களோடு கலந்துரையாடல்கள் முதல், தீபாவளி திருநாளுக்காக சுவையான விருந்தை சமைப்பது வரை இந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் அணிவரிசை, குடும்பங்களை ஒருங்கிணைத்து, வரம்பற்ற மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அவர்களுக்கு வழங்குவது நிச்சயம்.  
இது தொடர்பாக கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன் பேசுகையில், “இந்த தீபாவளி பண்டிகைக்காக மகிழ்ச்சியளிக்கும் சிறப்பான நிகழ்ச்சிகளின் அணிவரிசையை வழங்குவது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆனந்தத்தையும், திருப்தியையும் தருகிறது.  ஒரு குடும்பமாக சேர்ந்து அமர்ந்து, வீட்டில் அனைவரும் ரசித்து மகிழும்  வகையில் எமது பார்வையாளர்களுக்காக புதிய, பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் பலவற்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.  எமது இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டு மக்களால் அதிகம் நேசிக்கப்படும் நட்சத்திரங்கள் சிலரை உங்களுக்காக அழைத்து வருகிறோம்.  இந்தியாவில் மட்டுமன்றி, உலகளவிலும் வசிக்கின்ற இலட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியான இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக எமது சிறப்பு நிகழ்ச்சிகளின் அணிவரிசையின் மூலம் நாங்கள் நிச்சயம் இடம்பெறுவோம் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.
2020 தீபாவளி திருநாளுக்கு முந்தைய நாளில் இந்த அலைவரிசையில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.  கலர்ஸ் தமிழின் பிரபல நிகழ்ச்சியான அம்மன் – ல் பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி சிறப்பு வருகை தருகிறார்.  2020 நவம்பர் 13, வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு இந்த மாபெரும் கொண்டாட்டம் தொடங்குகிறது.  பொழுதுபோக்கு அம்சத்தை இன்னும் அதிகமாக்கும் வகையில் 2020 நவம்பர் 13, வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி, பரபரப்பான கதை நிகழ்வுகள் மத்தியில் டென்ஷனை குறைத்து ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்த வருகிறார்.  இதைத்தொடர்ந்து, மக்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்ற உயிரே தொடரில் 2020, நவம்பர் 13 வெள்ளிக்கிழமையன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோடில் கோலிவுட்டின் பிரபல நடிகர்களான நடிகர் பாபி சிம்ஹா மற்றும் பாண்டியராஜன் இடம்பெறுகின்றனர்.  நடிகர்களாகவே இந்நிகழ்ச்சியில் தோன்றுகின்ற இவர்கள், இத்தொடரின் முதன்மை ஜோடியான செழியன் மற்றும் பவித்ராவின் தலை தீபாவளி கொண்டாட்டத்தின்  ஒரு அங்கமாக இதன் நடிகர் பட்டாளத்தோடு கலந்துரையாடுகின்றனர் மற்றும் கேளிக்கை நிறைந்த விளையாட்டுகளை தொகுத்து வழங்குகின்றனர்.  இந்த சிறப்பு எபிசோடில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியிருக்கின்ற, ரசிகர்களை எழுந்து உற்சாகத்தில் நடனமாட வைக்கின்ற கொண்டாட்ட பாடலும் இடம்பெறுகிறது.  
புதினங்கள் அல்லாத மற்ற நிகழ்வுகளைப் பொறுத்தவரை கலர்ஸ் தமிழின் சமீபத்திய நிகழ்ச்சியான சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு – குருதேவ் உடன் – என்பதில் நடிகர் யூகி சேது, வாழ்க்கை மற்றும் ஆன்மீகம் பற்றி புத்துணர்வளிக்கும் உரையாடலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் மேற்கொள்கிறார்.  2020 நவம்பர் 14, சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.  இந்த நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நிறைவு செய்யும் வகையில் இந்த பிரபலங்களின் மாறுபட்ட, ஆனால் அதே வேளையில் ஒரே மாதிரியான வாழ்க்கையின் வழியாக பயணிக்கும் உரையாடல் மற்றும் சிந்தனை பகிர்வாக இந்த இறுதி எபிசோடு அமைகிறது.  இதைத்தொடர்ந்து, கலர்ஸ் கிச்சன் என்ற தனது சமீபத்திய அறிமுக நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான விருந்தை கலர்ஸ் தமிழ் படைக்கிறது.  2020 நவம்பர் 14, சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு எபிசோடில் செஃப் தாமு, செஃப் ஸ்ரேயா மற்றும் கலர்ஸ் தமிழின் பல கலைஞர்கள் மிக சுவையான திருவிழா விருந்தை சமைக்கின்றனர்.  2020 தீபாவளியின் மகிழ்ச்சியையும், கேளிக்கையையும் இன்னும் உச்சத்திற்கு எடுத்துச்செல்ல, 2020 நவம்பர், 14 சனிக்கிழம பிற்பகல் 4:00 மணிக்கு சித்திரம் பேசுதடி – 2 என்ற திரைப்படமானது, உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது.  பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் சித்திரம் பேசுதடி – 2, 48 மணி நேரங்கள் என்ற காலஅளவில் நிகழ்கின்ற நான்கு கதைகளை உள்ளடக்கிய, அற்புதமான திரைப்படமாகும்.  
இந்த தீபாவளியை உங்களது குடும்பத்தினரோடு ஆனந்தமாக கொண்டாடவும் மற்றும் உங்களது இல்லங்களை உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியில் நிரப்பவும் 2020 நவம்பர் 13, வெள்ளிக்கிழமை மற்றும் 2020 நவம்பர் 14 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களித்திடுங்கள் - கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).
                        
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        