ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.அமெரிக்காவில் இதற்கு 5 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.
டைட்டானிக் உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான லியானர்டோ டிகாப்ரியோ,தனது அறைக்கட்டளை மூலம் கொரோனா நிதியாக இந்திய மதிப்பில் ரூ.91 கோடி திரட்டி உள்ளார்.இதுபோல பிரபல ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி நிதி வழங்கி உள்ளார்.
இந்த தொகையை ஏழைகளுக்கு உணவு வழங்கவும், ஆதரவற்ற முதியோர், குழந்தை களுக்கு, மற்றும் நோயாளிகளை குணப்படுத்த போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த நன்கொடையை வழங்கியிருக்கிறார்கள்.
                        
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        