லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ''பன்னிக்குட்டி ''
லைக்கா புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் ''பன்னிக்குட்டி '' எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்.
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் " பன்னிக்குட்டி'' .
இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.
இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா , ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N .R சுகுமாரன் , படத்தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்கிறார்.  
நடிகர்கள்: 
கருணாகரன் , 
யோகிபாபு , 
சிங்கம் புலி , 
திண்டுக்கல் லியோனி , 
T.P கஜேந்திரன் , 
லக்ஷ்மி ப்ரியா , 
ராமர் , 
'பழைய ஜோக்' தங்கதுரை  
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் - அனுசரண் முருகையன் 
கதை - ரவி முருகையன் 
திரைக்கதை - M .மணிகண்டன் , அனுசரண், ரவி முருகையா 
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இசை - கிருஷ்ணகுமார் ( K ) 
ஒளிப்பதிவு- N .சதிஷ் முருகன் 
படத்தொகுப்பு- M .அனுசரண் 
சண்டை பயிற்சி - ' FIRE ' கார்த்திக் 
தயாரிப்பு மேலாளர் - M .சிவகுமார் 
ஒப்பனை-P S.சந்திரசேகர் 
கிரியேட்டிவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள் - சமீர் பரத் ராம் ( SUPER TALKIES ),M.மணிகண்டன் ( TRIBAL ARTS)
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அகமது 
                        
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        