தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிய மாயநதி நடிகர் அபி சரவணன்!
அபி சரவணன் முகநூல் பதிவில் இருந்து...
கொரோனாவின் கோரப்பிடியில் ஒட்டுமொத்த உலகமும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.
இருந்தாலும் எனது வீட்டில் எனக்கு உணவு கிடைப்பது போல அனைவரும் உணவு அருந்துவார்களா? என்ற கவலை.
எல்லோருக்கும் உதவிட என்னால் முடியாது எனினும் மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு என்னாலான சிறிய உதவியை செய்யலாம் என முடிவெடுத்தேன்.
எனது பள்ளி நண்பன் கார்த்திக் தேர்வு செய்த 100 குடும்பங்களுக்கு 'காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனர் ஜெசியுடன் இணைந்து சிறிய உதவியாக அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
கொரோனா வின் கொடூர பிடியில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து மருத்துவத்துறை , சுகாதார துறை, காவல் துறை உள்ளாட்சி துறை, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் தேவையான மன வலிமையையும் உடல் வலிமையையும் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவுவோம் .. பாதுகாப்புடன்.
- சிறிய மனத்திருப்தியுடன் அபி சரவணன்
                        
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        