மக்களின் மனதில் உதிராமல் இருக்கும் பூ : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி
            இயக்குனர் திரு . மகேந்திரன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பிரபல இயக்குனர்களில் மிகவும் போற்றுதலுக்குரிய இயக்குனர் திரு .மகேந்திரன் அவர்கள். அவருடைய படைப்புகளான முள்ளும் மலரும், மெட்டி, போன்ற திரைப்படங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும், ஆழமான கதையம்சம் கொண்டதாகவும் காட்சியமைப்புகள் மிகவும் அழகாகவும் இருக்கும். அதனால்தான் இன்றளவும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக உதிரிபூக்கள் திரைப்படம் அன்றைய காலகட்டம் அல்லது இன்றைய தலைமுறைகளிடம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் சினிமா எடுக்க வரும் இயக்குனர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாய் இருந்தவர். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அது மட்டுமின்றி, சமீபத்தில் இயக்குனர் அல்லாது நடிப்பிலும் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சினிமா எனும் தோட்டத்தில் உதிர்ந்த பூ. அதே சமயம் மக்களின் மனதிலும் சினிமா கலைஞர்கள் மனதிலும் என்றுமே உதிராமல் இருக்கும் பூ. இயக்குனர் திரு. மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பிலும், ஒட்டுமொத்த திரையுலகின் சார்பிலும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
                        



        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        