இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள் பீதி

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள் பீதி

ஜகார்தா :இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் சுலவேசி தீவிலும் உணரப்பட்டது.

மேலும் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலைகள் எழும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தோனேசிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.