ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: 16 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: 16 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு ஐந்தாவது மற்றும் இறுதி கட்டமாக 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.   

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 5 ஆவது மற்றும் இறுதியாக 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று வெள்ளிக்கிழமை காலை (டிச.20) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
ஜாா்க்கண்டில் ஏற்கெனவே, 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.   டிசம்பா் 23-இல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய வாக்குப் பதிவு தோ்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும்  மாநில தோ்தல் ஆணையம் செய்துள்ளது. 

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த மாவட்டத் தலைமையகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த மையங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.