கேரளாவில் கிறிஸ்தவர்கள் பற்றி அவதூறு பேச்சு- முஸ்லிம் மதகுரு மீது 3 பிரிவுகளில் வழக்கு

கேரளாவில் கிறிஸ்தவர்கள் பற்றி அவதூறு பேச்சு- முஸ்லிம் மதகுரு மீது 3 பிரிவுகளில் வழக்கு
கேரளாவில் கிறிஸ்தவர்கள் பற்றி அவதூறு பேச்சு- முஸ்லிம் மதகுரு மீது 3 பிரிவுகளில் வழக்கு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டேட்டியை சேர்ந்தவர் வசீம் அல் ஹிகாமி. முஸ்லீம் மதகுருவான இவர், கிறிஸ்தவர்கள் பற்றியும், கிறிஸ்தவம் பற்றியும் அவதூறான கருத்துக்களை பேசியதாகவும், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தேசிய செயலாளரான அனுப் ஆண்டனி எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி முஸ்லீம் மதகுரு வசீம் அல் ஹிகாமி மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 295 ஏ மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.