கலைஞர் டிவியில் "பகாசூரன்" - குடியரசு தின சிறப்பு திரைப்படம்
நமது கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி, வருகிற ஜனவரி 26-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் - நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான "பகாசூரன்" திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் "சிங்கப்பூர் சலூன்" திரைப்படத்தின் சிறப்பு நேர்காணல் மற்றும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் பங்கேற்கும் "நம்ம வீட்டு நட்சத்திரம்" சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.