ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு ஆன்மீக பகுதிகள் இடம்பெறுகின்றன.
அருள் நேரம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு ஆன்மீக பகுதிகள் இடம்பெறுகின்றன. ஆன்மீகம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் ‘அர்த்தமுள்ள ஆன்மிகம்’ பகுதியை மகேஷ் ஐயரும், நேர்மறை சிந்தனைகளை தாங்கிவரும் ‘ஆனந்த ஆரம்பம்’ பகுதியை மணிகண்டனும், சித்தர்களின் வரலாற்றை பதிவு செய்யும் ‘குருவே சரணம்’ பகுதியை சுவாமிநாதனும் வழங்குகின்றனர். இவை தவிர பழமையான கோயில்களின் தலவரலாறும், அபிஷேக – ஆராதனைகளும் ‘அருள்நேரம்’ நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
அர்த்தமுள்ள ஆன்மிகம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘அர்த்தமுள்ள ஆன்மீகம்’. இதில் அன்றாட நாம் செய்யும் பூஜைகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு எளிய நடையில் விளக்கமளிக்கப்படுகிறது. இப்பகுதியை பிரபல ஜோதிடர் திரு. மகேஷ் ஐயர் வழங்குகிறார்.
ஆனந்த ஆரம்பம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘ஆனந்த ஆரம்பம்’. இதில் காலை வேளையில் நேர்மறை சிந்தனைகளை வளர்க்கக்கூடிய அற்புதமான கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதியை பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் வழங்குகிறார்.
குருவே சரணம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘குருவே சரணம்’. மனிதர்களோடு மனிதர்களாய் வாழ்ந்து மனிதகுலத்தின் மேன்மைக்காக தொண்டாற்றிய பல்வேறு சித்தர்களின் வரலாற்றை இப்பகுதி பதிவு செய்கிறது. இதனை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுவாமிநாதன் தொகுத்து வழங்குகிறார்.