ரஜினியின் பிறந்தநாளையொட்டி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாழ்த்து..!!
சென்னை: ரஜினியின் பிறந்தநாளையொட்டி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி, ரஜினியின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.