தனிஷ்க் வழங்கும் 'இனிய ஆரம்பம் 21’

தனிஷ்க் வழங்கும் 'இனிய ஆரம்பம் 21’
தனிஷ்க் வழங்கும் 'இனிய ஆரம்பம் 21’

தனிஷ்க் வழங்கும் 'இனிய ஆரம்பம் 21’
ஜனவரி 11, 2021: இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய, மக்கள் விரும்பக்கூடிய ஜூவல்லரி பிராண்டான தனிஷ்க் (Tanishq) வாடிக்கையாளர்களின் புத்தாண்டை இன்னும் அழகூட்டும்விதமாக, நேர்மறையான மற்றும் செழிப்பான தருணத்தைக் குறிக்கும்விதமாக (2021க்கான 'இனிய ஆரம்பம் 21’) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. 'இனிய ஆரம்பம் என்பது புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கும்போது நம்பிக்கை ததும்பும் புதிய தொடக்கங்களையும் நேர்மறையான எண்ணங்களையும் குறிக்கிறது. மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில் புத்தாண்டு நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது.  
இந்த புத்தாண்டில் (2021) 1 யைச் சேர்க்கும் நடைமுறையானது நமக்கு ஆசீர்வாதம், புனிதத்தன்மை, பிரார்த்தனை வாழ்க்கையில் எப்போதும் அதிகமாவதைக் குறிக்கிறது. தனிஷ்க் கொண்டாடும் இனிய ஆரம்பம் ‘21 மூலமாக வாடிக்கையாளர்கள் வைர நகை மதிப்பில் 21% வரை தள்ளுபடி பெறலாம். அது மட்டுமல்லாமல், 12 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள வைர நகைகளுக்குக் கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறது தனிஷ்க்.
பழைய நகைகளுக்குப் பதிலாக புதிய நகைகளை [Exchange] பரிமாற்றம் செய்வதன் மூலமாக, மிக நேர்த்தியான வைர நகைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். பழைய தங்க நகை மதிப்பில் 100% பரிமாற்ற [Exchange] மதிப்பை அளிக்கிறது தனிஷ்க். இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே. இதனைப் பெற அருகிலுள்ள தனிஷ்க் விற்பனையகத்துக்குச் செல்ல வேண்டும் அல்லது ஆன்லைனில் https://www.tanishq.co.in/shagunfor21 என்ற தளத்தைப் பார்வையிட வேண்டும்.
எப்படிப்பட்ட கொண்டாட்டமாக இருந்தாலும் மிகவும் மதிப்பு வாய்ந்த பரிசுகளாக வைர நகைகள் கருதப்படுகின்றன. உங்களை நீங்களே வியந்து கொள்ளவும் அல்லது உங்களது பிரியத்துக்குரியவர்களுக்கு எப்போது சிறப்பைத் தரும் பரிசாக இது இருக்கும். தனிஷ்க் வழங்கும் பரந்து விரிந்த வைர நகைப் பிரிவில் மோதிரங்கள், காதணிகள், பதக்கங்கள், 
வளையல்கள், காப்புகள், கழுத்தணி என்று அற்புதமான வடிவமைப்பின் வகைப்படுத்தலில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமானவற்றை கவர்ச்சிகரமான விலையில் தேர்ந்தெடுக்க முடியும். 
இனிய ஆரம்பம் 21 பற்றி டைட்டன் கம்பெனி லிமிடெட், தனிஷ்க் சந்தைப்படுத்துதல் & சில்லறை விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் திரு.அருண் நாராயண் (Mr. Arun Narayan, VP-Category, Marketing & Retail, Tanishq, Titan Company Limited) பேசுகையில், இனிய ஆரம்பம் ‘21 ஒரு நல்ல தொடக்கத்திற்கான அடையாளம். ஒரு புதிய தொடக்கத்துக்கான வாழ்த்தை தெரிவிக்க 2021க்காக ஒன்றை (1) சேர்க்கும் நடைமுறையில் இருந்து இனிய ஆரம்பம் ‘21 உருவாகிறது. 2021-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும்போது, எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கைக்கான உறுதியை அபரிமிதமாக வழங்க வேண்டுமென்று எண்ணுகிறோம். இந்த சென்டிமெண்டில் இன்னும் கொஞ்சம் பிரகாசத்தைச் சேர்க்கும்விதமாக, அட்டகாசமான தள்ளுபடி விலையில் பரந்தளவிலான வைர நகைகளை அளிக்கிறது தனிஷ்க்கின் இனிய ஆரம்பம் ’21 தனிஷ்க் சார்பாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.  
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
தனிஷ்க் பற்றி….:
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான, தனிஷ்க் இந்தியாவில் மிக அதிகம் விரும்பப்படும் நகை ப்ராண்ட்டாக முன்னிலை வகிக்கிறது.நேர்த்தியான வடிவமைப்பு, அருமையான டிசைன்கள், உயர்ந்த மற்றும் உத்தரவாதமுள்ள தரம் ஆகியவற்றுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களிடையே பெரும் நற்பெயர் பெற்றுத் திகழ்கிறது  தனிஷ்க். இந்தியப் பெண்களின்  நகைத் தேவைகளைக்  கருத்தில் கொண்டு, அவர்களது எதிர்பார்புகளைக் கவனத்தில் கொண்டு அவர்களது விருப்பத்திற்கேற்ற  பாரம்பரிய  மற்றும்  தற்கால பாணிகளிலான  நகைகளை வடிவமைத்து  விற்பனை  செய்யும் தனிச்சிறப்பு மிக்க  ஒரே  நகை நிறுவனம்  தனிஷ்க்  ஆகும். தனிஷ்கின் தனிச் சிறப்பை உறுதி  செய்து அதை நிரூபிக்கும் விதமாக, நம்பிக்கை  ஆய்வு ஆலோசனைக்  குழுமம்  எனப்படும்  டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி -யால் 2019-ம் ஆண்டு  “இந்தியாவில் மிகவும் நம்பகமான நகை பிராண்ட்” [The Most Trusted Jewellery Brand in India by the Trust Research Advisory] என்ற விருது  தனிஷ்கிற்கு வழங்கப்பட்டது. மிகத் தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனிஷ்க் விற்பனை நிலையங்களில் அதிநவீன காரட் மீட்டர்கள் உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளின் தூய்மைத் தன்மை குறித்து, வெளிப்படைத்தன்மையுடன் பரிசோதித்து அறிந்து கொள்ளலாம். தங்க  மற்றும்  கற்கள்  பதித்த  நகைகளை  (22 காரட் மற்றும் 18 காரட்)  5  ஆயிரம் பாரம்பரிய, மேற்கத்திய  மற்றும்  இரண்டும் இணைந்த அழகிய வடிவமைப்புகளில்  தனிஷ்க் தயாரித்து விற்பனை  செய்கிறது.  நகைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த அதிநவீன தொழிற்சாலையில்  தயாரிக்கப்படுகின்றன.  தற்போது 200 நகரங்களில் 350-க்கும் அதிகமான சில்லறை விற்பனை  நிலையங்கள்  தனிஷ்கிற்கு  உள்ளன.