இந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் இந்தியாவின் நிலைமை மோசமாகி உள்ளது
தமிழகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அபாய பகுதியாக அறிவித்தது தமிழக அரசு.
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2069 ஆக உயர்வு.
தமிழகத்தில் 309 பேருக்கு கொரோனா , மகாராஷ்டிராவில் 339 பேருக்கு , கேரளாவில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு.
ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்.
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும் - தமிழக முதல்வர் பழனிசாமி.
N95 மாஸ்க், வெண்டிலேட்டர்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் - பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது.12 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை.
டெல்லி AIIMS மருத்துவருக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவரின் கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனக்கூறி ஹரியானா அரசு சுவிங்கம்மை ஜூன் 30ம் தேதி வரை தடை செய்துள்ளது.
சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வழங்கப்படும் பாஸ், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மட்டுமே வழங்குவர் - தலைமைச் செயலர் சண்முகம்.
ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.
கேரளாவில் இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 21 பேரில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணியும் ஒருவர் - முதல்வர் பினராயி விஜயன்.
கொரோனா பரவும் இக்கட்டான சூழலில் மதத்தை வைத்து பிரச்சனையை உருவாக்க வேண்டாம் - ஈஷா மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்.
டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) தலைமை மருத்துவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
ஏப்.7ஆம் தேதி தொடங்க இருந்த விடைத்தாள் திருத்தம் பணி இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு.விடைத்தாள் திருத்தும் பணிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்கம்.
சரக்கு வாகனங்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம். சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் பாஸ் கேட்க வேண்டாம் : தமிழக காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு.
வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப்ஸ்டைல் கடைக்கு மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரையில் சென்று வந்தவர்கள் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள் - சென்னை மாநகராட்சி.
கொரோனா பரவும் இக்கட்டான சூழலில் மதத்தை வைத்து பிரச்சனையை உருவாக்க வேண்டாம்.ஒரு குறிப்பிட்ட மதத்தினால்தான் கொரோனா பரவுவதாக தவறான செய்தியை பரப்ப கூடாது- ஜக்கி வாசுதேவ்