மோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம் கைதான பின் நடிகை குஷ்பு ட்வீட்

அநியாயத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம் என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவு படுத்தி பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரல் ஆனது. இதற்கு பாஜகவினர் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இருப்பினும், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கோழைகள் விசிக. மகிழ்ச்சியடைய வேண்டாம். இது உங்கள் தோல்வி. நாங்கள் சக்தி உடையவர்கள் என்பதால் தான் கைது செய்துள்ளனர். அநியாயத்துக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம்.கைது செய்யப்பட்டேன். போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டேன். பெண்களின் கண்ணியத்தை காக்க எங்கள் கடைசி மூச்சு வரை போராடுவோம். மோடி ஜி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அங்குள்ள சில கூறுகளின் அட்டூழியங்களுக்கு நாம் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்” என குறிப்பிட்டுள்ளார்.