“டிக் டிக் செய்திகள்”
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் பிற்பகல் 2:00 மணிக்கு “டிக் டிக் செய்திகள்” ஒளிபரப்பாகிறது. தொடர் நேரலை செய்தி வடிவத்திலிருந்து மாறுபட்டு விறுவிறுப்பாக அந்த நாளின் நிகழ்வுகளை சுருக்கமாகவும், மக்களின் மனதுக்கு நெருக்கமாகவும் செய்தியாக்கி தரவிருக்கிறது இச்செய்தி அறிக்கை.
தமிழக, தேசிய அரசியல் நகர்வுகள், அரசு அறிவிப்புகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள், சமூக வலைத்தள சர்ச்சைகள், சுவாரஸ்யமான திரையுலக தகவல்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள், பதற வைக்கும் விபத்துகள், உறைய வைக்கும் குற்றச் செய்திகள், உலகை உலுக்கும் நிகழ்வுகள், கண்ணை கவரும் திருவிழாக்கள், பொருளாதாரம் என அனைத்து தரப்பட்ட செய்திகளையும் செய்திச் சரமாக கோர்த்து வழங்கவுள்ளது நியூஸ் 7 தமிழின் டிக் டிக் செய்திகள்.
உணவு இடைவேளையே தகவல் களஞ்சியமாய் மாற்றும் அளவிற்கு தேர்ந்தெடுத்த செய்திகளின் சரவெடியாய் நிமிடத்திற்கு நான்கு செய்திகள் வரைகலைத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்படக் காட்சிகளுடன் அணிவகுக்க இருக்கிறது இந்த செய்தி அறிக்கை. இந்நிகழ்ச்சியை சிவசங்கரி மற்றும் மனோஜ் தொகுத்து வழங்குகின்றனர்.