நியூலாந்து நாட்டில் முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தலைமையிலான அமைச்சரவையில் புதியதாக 5 அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட 5 பேரில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பவரும் ஒருவர்.

இவர் இந்திய வம்சாவளி. சென்னையில் பிறந்த இவர் சிங்கப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

பின்னர் மேல்படிப்பை நியூசிலாந்தில் தொடர்ந்தார்.

முதன் முறையாக கடந்த 2017ம் ஆண்டு தொழிலாளர் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 2019ம் ஆண்டு இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்துறை இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை