ரூ. 2,000 நோட்டுகள் மாற்றம் மூலம் இதுவரை ரூ. 14,000 கோடி திரும்பியது: எஸ்பிஐ வங்கி தலைவர் தகவல்

ரூ. 2,000 நோட்டுகள் மாற்றம் மூலம் இதுவரை ரூ. 14,000 கோடி திரும்பியது: எஸ்பிஐ வங்கி தலைவர் தகவல்
ரூ. 2,000 நோட்டுகள் மாற்றம் மூலம் இதுவரை ரூ. 14,000 கோடி திரும்பியது: எஸ்பிஐ வங்கி தலைவர் தகவல்

அகமதாபாத்: ரூ. 2,000 நோட்டுகள் திரும்ப பெறுதல் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ. 14,000 கோடி திரும்பியதாக எஸ்பிஐ வங்கி தலைவர் தெரிவித்தார். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. கடந்த 23ம் தேதி முதல் வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன அல்லது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.

பொதுமக்களிடம் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால், வங்கிகளில் பெரிய அளவில் கூட்டமோ, தள்ளுமுள்ளோ ஏற்படவில்லை. வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்கின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தலைவர் தினேஷ் காரா கூறுகையில்,

உலகளாவிய பத்திர சந்தையின் 10 பில்லியன் டாலர் குளோபல் மீடியம் திட்டத்தின் கீழ், எஸ்பிஐ சார்பில் 750 மில்லியன் டாலர் வெளிநாட்டு நாணயப் பத்திரங்கள் பட்டியலிட்டது. ரூ. 2000 நோட்டுகளை திரும்ப பெறுதல் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்தது முதல் கடந்த 23ம் தேதி முதல் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள் திரும்பப் பெறுகின்றன.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இதுவரை ரூ.14,000 கோடி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, வங்கியின் கிளை நெட்வொர்க் மூலம் ரூ.3,000 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது. திரும்பப் பெறப்பட்ட கரன்சி நோட்டுகள் சட்டப்பூர்வமாக புழக்கத்தில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்றார்.