மதுரை அருகே இறந்த 6 மாத பெண் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து விசாரணை..!
மதுரை வில்லாபுரத்தில் மர்மமான முறையில் இறந்த 6 மாத பெண் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காளீஸ்வரன்-கார்த்திகை தம்பதியின் 6 மாத குழந்தை அதிதி இரு நாட்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். மதுரை தெற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.